பாதை வசதி இல்லாததால் கழுத்தளவு கண்மாய் நீரை கடந்து உடலை அடக்க செய்த பொதுமக்கள்




யானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் கழுத்தளவு கண்மாய் நீரை கடந்து இறந்தவரின் உடலை பொதுமக்கள் அடக்க செய்தனர். எனவே இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உடல் அடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மேலப்பழுவஞ்சி மற்றும் கீழப்பழுவஞ்சி ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியை சேர்ந்தவர்கள் யாரேனும் இறந்தால் அவர்களது உடல் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம்.

கண்மாய் நீரை கடந்து...
ஆனால் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருவேல காடுகள் மற்றும் கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே இறந்தவர்களின் உடலை  அப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த சிங்காரம் (வயது 70) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, அவரது உடலை தோளில் சுமந்தபடி கழுத்தளவு கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.
பாலம் அமைக்க கோரிக்கை
இதேபோல் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி ஊராட்சி தெற்கு தெருவில் வசித்து வந்த அய்யாவு என்பவரின் மனைவி காவேரி அம்மாள் (85) நேற்று மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு அந்த ஊரின் வழியாக செல்லக்கூடிய அக்னி ஆற்றின் அருகே உள்ள மயானத்தில் நடைபெற்றது. இதையொட்டி காவேரி அம்மாளின் உடலை அக்னி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் சுமந்து சென்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி அல்லது பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments