கோபாலப்பட்டிணத்தில் விட்டு விட்டு மழை







கோபாலப்பட்டிணத்தில் விட்டு விட்டு மழை பெய்தது

இலங்கை கடலோர பகுதி மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், பல மாவட்டங்களில் கன மழைப் பெய்து வருகிறது. 

டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒன்பது மாவட்டங்களில், இன்றும், நாளையும்மிக கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில்  இன்று நவம்பர் 01 திங்கள் கிழமை காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது இரவு 8.30 மணிக்கு இலேசான தூரல் ஆரம்பித்து அதன் பிறகு கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர்  தேங்கி நின்றது பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 
 
கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல குளிர் நிலவி வருகிறது.

இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments