கோபாலப்பட்டிணத்தில் மழை தணிந்து வெயில்: மக்கள் மகிழ்ச்சி






வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில  நாள்களாக இரவு பகலாக  மழை பெய்து வருகிறது  

கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில  நாள்களாக மழை மேகங்கள் சூழ்ந்து அவ்வப்போது சாரல் மழை,பலத்த மழை, கன மழையுமாக பெய்து வந்தது. இதனால் இப்பகுதிகளில்  உள்ள , குளம்,  உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 

கோபாலப்பட்டிணத்தில் சில பகுதிகளில்  சாலைகள்  சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைத்தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.

இந்நிலையில் இன்று 11 நவம்பர் ‌வியாழக்கிழமை கோபாலப்பட்டிணத்தில் காலை  வானத்தை சூழ்ந்திருந்த மழை மேகங்கள் விலகி   வெயில் அடித்தது. 

காலையிலேயே வெயில் சுல்லென அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழையைப் பார்த்து வந்த மக்களுக்கு இந்த வெயிலைப் பார்த்தது உற்சாகமாய் இருந்தது. இன்னும் சில நாள்களுக்கு இவ்வாறு தொடர்ந்து வெயில் அடித்தால் சேறும் சகதியுமாக உள்ள சாலைகள் காய்ந்து போக்குவரத்திற்கு தடை இல்லாத நிலை ஏற்படும். 

மேலும் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வெளியேறிவிடும். வீடுகளில் மக்கள் துணிமணிகளை உலர வைப்பதற்கு இந்த வெயில் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் தெரிவித்தனர்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...





Post a Comment

0 Comments