ஆவுடையார்கோவிலில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!ஆவுடையார்கோவில் கடைவீதியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் சேவுகப் பெருமாள், விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எழுநூற்றிமங்கலம், வீரமங்கலம், கிடங்கிவயல் மற்றும் பொன்பேத்தி ஆகிய வட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 2020-21-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வழங்காததை கண்டித்தும்,

கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளில் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், போன்ற உரங்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் அல்லல் படுவதை கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படுகின்ற சம்பளம் தனித்தனியாக சாதி வாரியாக ஊராட்சிகளின் சார்பில் கூலி ஏற்றப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செங்கோடன், விவசாய தொழிலாளர் சங்கமாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெபமாலை பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments