புதுகை மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகள் நலக்குழு ஆய்வுக்கூட்டம்!புதுக்கோட்டை மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகள் நலக்குழு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய தகவல் மற்றும் மாவட்டத்தில் உள்ள காப்பகங்களில் குழந்தைகள் சேர்க்கை விவரம், தத்து குழந்தைகள் பற்றிய விவரம் மற்றும் குழந்தைகள் நலனுக்காக சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். 

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி, நன்னடத்தை அலுவலர் பிரேம்நாத், குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments