மீமிசல் மற்றும் ஆவுடையார்கோவில் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடாமலேயே போட்டதாக சொல்லப்பட்டதால் அதிர்ச்சி!மீமிசல் பகுதியில் முதல் தவணை தடுப்பூசி போட்ட சிலருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டதாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், கல்லூரி மாணவி மற்றும் பொதுமக்கள் 2-வது தவணை செலுத்த முடியாமல் தவித்தனர்.

இதேபோல ஆவுடையார்கோவில் தாலுகா, குண்டகவயல் அருகே உள்ள மருத்தாக்குடி கிராமத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் குண்டகவயலில் நடைபெற்ற முகாமில் ஜூலை மாதம் 20-ந் தேதி கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டியிருக்கிறார். அவர், 2-வது தவணை தடுப்பூசி போட அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆதார் கார்டை காண்பித்து இருக்கிறார். 

அப்போது அந்த மாணவிக்கு ஏற்கனவே இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக தகவல் பதிவாகி உள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்து தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், இந்த குளறுபடி எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. எங்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் கல்லூரி மாணவிக்கு தடுப்பூசி போடப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments