புதுகை மாவட்ட பள்ளிகளில் மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தல்!புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணத்தினால் தலைமை ஆசிரியர்கள் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன்கருதி வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பள்ளிக்கட்டிடங்களின் சாவிகளை ஒப்படைக்க வேண்டும். அவர்களிடம் மின்மோட்டார் மற்றும் குடிநீர் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். 

பள்ளி வளாகத்தில் அனைத்து வகுப்பறைகளிலும் மின் சாதனங்களின் பாதுகாப்பினை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களுக்கு அருகில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்லாத வண்ணம் பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மாணவர்கள் குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாத வகையில் தகுந்த அறிவுரைகள் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கறம்பக்குடியில் நரிக்குறவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளியை முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments