ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனை நேரில் பாராட்டிய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்!


ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனை நேரில் பாராட்டிய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்!

மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு பாரம்பரிய நாட்டுப்புற  பாடல் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்து,  ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமைத் தேடித்தந்த ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவன் E.காளிதாசன், XII F (வரலாற்று பிரிவு) , விளக்கூர், கரக்கத்திக்கோட்டை ( po), 
காளிதாசனை நேற்று 19/11/2021 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய திருமதி கவிதா ராமு அவர்கள் தமது இல்லத்திற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மாணவன் காளிதாசன் பாடிய பாடலை மீண்டும் பாடச் சொல்லி கேட்டு மிகவும் ரசித்து பாராட்டினார். இந்நிகழ்வில் மரியாதைக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களும், ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள்  மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலகத்தில் மரியாதைக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவன் காளிதாசனை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments