மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்!மணமேல்குடி ஒன்றியத்தில் 2020-21-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து இன்று(செவ்வாய்க்கிழமை) சாலை மறியலில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்தனர். 

ஆனால் அங்கு தாசில்தார் மற்றும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் விவசாயிகள் அதிகாரிகள் வரும்வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments