கொசு தொல்லையால் கோபாலப்பட்டிணம் மக்கள் அவதி! ஊராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் கோரிக்கை!!!கோபாலப்பட்டிணத்தில் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க ஊராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக  மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது.இதனால், கோபாலப்பட்டிணம் பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து அடிப்பது, குளோரினேசன் செய்வது போன்ற பணிகளை ஊராட்சி நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.  

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் கொசு தொல்லையை கட்டுப்படுத்தி, டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய் தொற்று பரவுவதில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments