மக்களே! மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!!



தமிழகத்தில் இயல்பை விட மழை அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தவகையில் கோபாலப்பட்டிணம் உட்பட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் நாம் எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அந்தவகையில் பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:
  • மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்), மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது.
  • இரும்பு மின் கம்பங்களை தொட வேண்டாம்.
  • மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் கைகளால் தொடக் கூடாது, உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
  • தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • ஈரமான கைகளால் ஸ்விட்சை இயக்கக் கூடாது.
  • மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.
  • மழைநீரால் சூழப்பட்ட சாலைகளில் வாகனங்களில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.
  • குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
  • மழைக்காலங்களில் குழந்தைகளை வெளியே அனுப்புவதை முடிந்தவரை தவிர்க்கவும்.
  • இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
  • இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும். 

* தங்களது குழந்தைகளை தெருவில் விளையாட அனுப்ப வேண்டாம். 

* மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளுக்கு அருகில் செல்வதை தவிர்த்து கொள்ளவும். 

* அறுவடை காலம் என்பதால் சாலைகளில் வைக்கோல் கிடக்க வாய்ப்புள்ளது. இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் கவனமாக செல்லவும். கண்டிப்பாக தலை கவசம் அணியவும். 

* பழுதான சாலைகளில் செல்லும்போது அதிக கவனத்துடன் செல்லவும். 

வெளிநாடு வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்க வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.

என்றும் விழிப்புணர்வு பணியில்... ஊர் அக்கறையுடன்....

GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments