மீமிசலில் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி!புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மீமிசல் நகரத்தில் தமுமுகவின் சார்பில் நேற்று 17.11.2021 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸை அர்ப்பணித்து தமுமுக-மமக தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். தமுமுக மாநிலச்செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா, பிற சமுதாய தலைவர்கள், மண்டலம் ஜெயினுல் ஆபிதீன், மாநில மீனவர் அணிச்செயலாளர் ஜெகதை செய்யது போன்றவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும், ஜமாத்தார்களும், பெண்களும் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments