கோபாலப்பட்டிணம் ஈத்கா‌ மைதானத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்!தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரை தெருவில் இயற்கை அழகுடன் ஈத்கா மைதானம் அமைந்துள்ளது.
இந்த மைதானத்தில் இங்கு உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றார்கள். 
தற்போது மழை பெய்து வருவதால் ஈத்கா மைதானத்தில் மழை நீர் சூழ்ந்த உள்ளது.
இதனால் ஈத்கா மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments