திருமுருகன் காந்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!மத்திய, மாநில அரசுகள் குறித்து அவதூறாக பேசியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் என்பவர் கடந்த மாதம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
இந்த போராட்டத்தில் கடந்த மாதம் 22ம் தேதி கலந்துகொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மத்திய, மாநில அரசுகளை அவதூறாக பேசியுள்ளார். இதனால், அவர் மீது 153,505(1),(3) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம் குறித்து, பேசியதற்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும்153A மற்றும் 505 ஆகிய இரண்டு பிரிவுகளில் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments