புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சிறைவாசிகள் சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு வார்டு தொடக்கம்!



புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு வார்டின் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். விழாவில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வார்டில் புதுக்கோட்டை பாஸ்டல் பள்ளியில் உள்ள சிறைவாசிகள் சிகிச்சை பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இங்கு சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான சிகிச்சை இங்கு அளிக்கப்படும். ஆண் மற்றும் பெண் சிறைவாசிகள் தனித்தனியாக சிகிச்சை பெறுவதற்கும், இவர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் தங்குவதற்கும் தனித்தனி அறைகள் கொண்ட சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இங்கு சிறைவாசிகளுக்கு பிற மருத்துவமனைகளை போன்று உயர்தரமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். தமிழகத்தில் சிறைச்சாலைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதிதாக சிறைக்கு செல்லும் கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன்பின்னர் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு சிறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments