மீமிசலில் கஞ்சா வியாபாரி மீது பாய்ந்த குண்டர் சட்டம்!



மீமிசல் பகுதியில் கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் கஞ்சா விற்ற மகேசை (வயது 49) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்தநிலையில் மகேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தததின் பேரில் கலெக்டர் கவிதாராமு குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

இதையடுத்து அதற்கான நகலில் மகேசிடம் கையெழுத்து பெற்றனர். மேலும், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments