கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தைத் தவிர்க்க ஓரமாக ஒதுங்கிய கார் நுழைவாயில் சுவர் மீது மோதி விபத்து!இருசக்கர வாகனம் மீது மோதுவதைத் தவிர்க்க சாலையில் ஓரமாக ஒதுங்கிய கார், கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி நுழைவாயில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆதிபட்டினத்தை நோக்கி இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இதில் கார் ஓட்டுநர் சாகுல் ஹமீது, அவருடைய நண்பர் ரகுமான் கான் என 2 பேர் இருந்தனர். கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்த நிலையில் கோபாலப்பட்டிணத்திற்கு செல்வதற்காக சாலையின் மறுபுறம் திடீரென சென்றதையடுத்து அதன் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டுநர் சற்று ஓரமாக திருப்பியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கோபாலப்பட்டிணம் நுழைவாயில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ரகுமான் கான் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். அப்போது அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் மோதிய விபத்தில் கார் கண்ணாடி மற்றும் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments