வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்' - தமிழக அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரில் இருந்து வருவோருக்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பரிசோதனை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 14 நாள்களுக்கு தனிமையில் கண்காணித்தல் உள்ளிட்ட மத்திய அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அந்தவகையில் இந்தியாவும் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அந்தவகையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், தங்களது பயண நேரத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அதில் கரோனா அறிகுறிகள் தென்பட்டால், 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments