புதுக்கோட்டை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கான அகில இந்திய தொழிற்தேர்வு மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்பு!புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் தனித் தேர்வர்களுக்கான அகில இந்திய தொழிற்தேர்வுக்கு மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்தேர்வு தொடர்பான கல்வித்தகுதி, தேர்வுக்கட்டணம் செலுத்துவது, தேர்விற்கான அறிவுரைகள் தொடர்பான முழு விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் அதனை முழுமையாக படித்து விண்ணப்பத்தினை கவனமாக பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சரிவர பூர்த்தி செய்யாத மற்றும் தவறான விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த நிலையத்தில் வருகிற 22-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் கவிதாராமு கேட்டுக் கொண்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments