புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் சேவை தொடங்கியதுகொரோனா காலகட்டத்தில் ரெயில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் முன்பதிவு டிக்கெட் மட்டுமே எடுத்து பயணம் செய்யும் படி நிலை இருந்தது.

இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் ரெயில்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை எம்.பி. அப்துல்லா கலந்து கொண்டு பேசுகையில், புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து பயணிக்கும் சேவையை தொடங்க வலியுறுத்தினார். 

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்காக ரெயில் பெட்டிகளில் டி.14, டி.15, டி.16 ஆகிய பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு எம்.பி.கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments