மீமிசல் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார்!மீமிசல் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மீமிசல் ஏம்பக்கோட்டை செக்போஸ்டில் மீமிசல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒரு நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். ஸ்கூட்டரில் வந்தவர், ஸ்கூட்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். 

இதையடுத்து போலீசார் ஸ்கூட்டரை சோதனையிட்டபோது அதில், புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments