கோபாலப்பட்டிணத்தில் தீடிரென கொட்டிய மழை!தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 18ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை உட்பட 20 மாவட்டங்களில் இன்றும்;  நாளையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது வந்தது. இந்நிலையில் நவம்பர் 15 திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் மழை மேகங்கள் சுழ்ந்து தீடிரென சுமார் ஒரு மணி நேரமாக மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. சாலைகளில் மழை நீர் ஓடியது, பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இதனால் கோபாலப்பட்டிணம்.பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments