கோபாலப்பட்டிணத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்த இளம் வாக்காளர்கள்கோபாலப்பட்டிணத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர், இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு நாட்களாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. 
இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர், இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

இதேபோல பட்டியலில் பெயர்களை நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்ளவும் படிவங்களை பூர்த்தி செய்து பொதுமக்கள் கொடுத்தனர்.
இந்த கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 22 பேரும், 4 நபர்கள் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments