விராலிமலை அருகே மீனவேலி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம்!விராலிமலை ஊராட்சி ஒன்றியம் மீனவேலி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக்கூட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி மன்றங்கள் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் வட்டார சமூக தணிக்கை அலுவலர் மோகன்ராஜ் வரவு-செலவு கணக்கு வாசித்தார். 100 நாள் வேலை திட்ட பணிகள், தொழிலாளர்கள் வருகை பதிவேடு, அதற்கான செலவினம், தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் தேவையான உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் (கி.ஊ), ரவிச்சந்திரன், உள்ளிட்ட ஊராட்சி அலுவலர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments