தமிழகத்தில் கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பருவத்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற்றன. தற்போது கொரோனா வெகுவாக குறைந்ததால் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல இயங்கி வருகின்றன.
இதனால் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்துவதற்கு பதிலாக நேரடியாக நடைபெறும் என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேரடி தேர்வு முறைக்கு கல்லூரி 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் முறையிலேயே தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன்படி புதுக்கோட்டையில் நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் அதிகாரிகள், திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.