திருப்பெருந்துறை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்!திருப்பெருந்துறை ஊராட்சியின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

ஆவுடையார்கோவிலில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருப்பெருந்துறை ஊராட்சியின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பெரியசாமி முன்னிலையிலும் நடந்தது. 

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார், கூட்டத்தில் ஊராட்சி செயலர் ராஜ்குமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments