கோட்டைப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலத்தை கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். 

அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்பு அரசு மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது. 

இதில் சாலை பாதுகாப்பு குறித்து துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் போலீசார், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments