மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பாக நாளை நவ.23 நடைபெற இருந்த சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு! ஐக்கிய வர்த்தக சங்கம் அறிவிப்பு!!மீமிசலில் காவல் துறையை கண்டித்து ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பாக நாளை நவ.23 நடைபெற இருந்த சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஐக்கிய வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலை மீமிசலில் கடந்த 17.09.2021, வெள்ளிக்கிழமை அன்று மொத்தமாக 8 க்கும் மேற்பட்ட கடைகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது.

 அதற்கு மீமிசல் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மேலும் ஒரு செல்போன் கடையை பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றது.

 ஆகையால் மீமிசல் கடைத்தெருவில் நடக்கும் தொடர் திருட்டு சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காத மீமிசல் காவல்துறையை கண்டித்து நாளை 23.11.2021, செவ்வாய்க்கிழமை நடக்கவிருந்த மாபெரும் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நேற்று 21.11.2021 அன்று மீமிசல் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர், கோட்டைப்பட்டிணம் சரகம் அவர்கள் ஐக்கிய வர்த்தக சங்க நிர்வாகிகளை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்பதை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments