வெள்ளப்பெருக்கு குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது இந்நிலையில் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி விட்டன. இதனால் உபரிநீர் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உபரி நீர் வெளியேறுவதால் திருப்புனவாசல் ஓரியூர் ஆற்று பாலத்தில் மழைநீர் வெள்ளம்போல் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக யாரும் செல்ல வேண்டாம் என திருப்புனவாசல் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஒலிப்பெருக்கி மூலம் கிராமம் கிராமமாக சென்று எச்சரிக்கை விடுத்து பிரசாரம் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments