அன்பார்ந்த கோபாலப்பட்டிணம் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.!சகோதரர்களே தற்போது தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

எனவே சகோதரர்களே நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் பொதுமக்களை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த காலங்களை போல் கோபாலப்பட்டிணம் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகளும் உங்கள் அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கும் மற்றும் நமது ஊரில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்ய முன்வர வேண்டும் என்று கோபாலப்பட்டிணம் மீடியா சார்பாக உங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

சகோதரர்களே பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் அருந்துவது மூலம் நமது ஊர் பொதுமக்களை டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க முடியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments