புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!புதுக்கோட்டையில் திலகர் திடல் அருகே ஒரு மண்டபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி டவுன் போலீஸ் நிலையம் சார்பில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பெண்கள், குழந்தைகள் மீது பெற்றோர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சமூகவலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த அனுமதிக்கூடாது. 
குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்’’ என்றார். 
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் குருநாதன், வக்கீல் பர்வீன் பானு, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட போலீசார், பெண்கள், குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments