ஆவுடையார்கோவிலில் ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!ஆவுடையார்கோவிலில், வேளாண்மை பொறியில் துறை சார்பில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அதன் தொடர்ச்சியாக ஆவுடையார்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறை அலுவலகத்தில் புதுக்கோட்டை வேளாண்மைத்துறை துணை இயக்குனர் தலைமையில், ஆவுடையார்கோவில் உதவி வேளாண்மை இயக்குனர் வனரோஜா முன்னிலையில், அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் உமாதேவி ஆகியோர் குத்து விளக்கேற்றினர். 

விழாவில் அரசியல் கட்சியினர் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments