ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்!முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டப்பட்டது.

இதனையொட்டி நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு குழந்தைகள் தின வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அதனை பள்ளி வேதியியல் ஆசிரியை பத்மாவதி எடுத்துரைத்தார். 

விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments