போட்டித் தோ்வு, வேலைவாய்ப்பு தகவல்களை அறிய ‘உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ செல்போன் செயலி: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா மற்றும் பொது நூலகத்துறையின் மின் நூலகம் சார்பில் உங்கள் நூலகம் உள்ளங்கையில் எனும் செல்போன் செயலியினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

அந்தவகையில் மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் மற்றும் கன்னிமாரா பொது நூலகத்தில் பணியாற்றும் 33 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பாராட்டுகளையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இளைய சமூகத்தினர் மாநில, மத்திய அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள உதவும் ‘உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ என்ற ‘TN Employment News' என்ற செல்போன் செயலி மற்றும் www.tnemployment.in என்ற இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். 

மேலும் உலக தமிழ் சமுதாயத்தினரும், வருங்கால சந்ததியினரும் தொன்மையான, தமிழர் மற்றும் தமிழ் மொழியினை அறிந்து கொள்ளும் வகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அச்சுநூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்களை, பொது நூலக இயக்ககம் மின்னுருவாக்கம் செய்து இருக்கிறது. 

அதன்படி, 19 ஆயிரத்து 864 நூல்களும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 694 ஓலைச்சுவடி பக்கங்களும் மின்னுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை எளிதாக பயன்படுத்தும் வகையிலான மின் நூலகத்தினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். மின் நூலகத்தை www.tamilnadupubliclibraries.org என்ற இணையதளம் வழியாக பயன்படுத்தலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments