திருப்பெருந்துறை ஊராட்சியில் வருகிற ஜன.1 முதல் கடைகளில் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்படுத்த தடை! மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!!



திருப்பெருந்துறை ஊராட்சி அனைத்து வணிக பெருமக்களுக்கும் ஊராட்சி மன்றம் சார்பில் வருகிற 01.01.2022 சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் (நெகிழி) பயன் படுத்தக்கூடாது எனவும், தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்றவை விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்பெருந்துறை ஊராட்சியில் 01.01.2022 சனிக்கிழமை முதல் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எளிதில் மக்காத பிளாஸ்டிக் (நெகிழிகள்) சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. நமது திருப்பெருந்துறை ஊராட்சியின் அனைத்து வர்த்தகர்களும் சமூக நலன்கருதி பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாமென திருப்பெருந்துறை ஊராட்சி மன்றம் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. 
மீறிப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபாரத் தொகையுயம், தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்றவை விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
திருமதி. சந்திரா ராஜமாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் 
மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம் 
திருப்பெருந்துறை ஊராட்சி மன்றம் 
ஆவுடையார்கோவில் ஒன்றியம், 
புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments