எஸ்.பி.பட்டினத்தில் ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி!



தொண்டி அருகே உள்ளது எஸ்.பி.பட்டினம். இங்குள்ள மீன் மார்க்கெட் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு நேற்று முன்தினம் இரவு 2.44 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முகமூடி அணிந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கீழே குனிந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்க்கிறார். அப்போது அபாய ஒலி சத்தம் கேட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சிறிது நேரத்தில் வெளியே சென்றுள்ளார். இந்த காட்சியை மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் கண்காணித்துள்ளனர். 

அதனை தொடர்ந்து அங்கிருந்து ராமநாதபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் எஸ்.பி.பட்டினம் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
முகமூடி அணிந்திருந்த  திருடனின் சி.சி.டி.வி காட்சி 

அப்போது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த ஏ.டி.எம். எந்திரம் லேசாக திறந்து இருப்பதும் கொள்ளை முயற்சி நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள எஸ்.பி.பட்டினம் போலீசார் அந்த மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஏ.டி.எம். இயந்திரத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த போலீசார் அனுமதிக்கவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments