ஒமிக்ரான் வைரஸ்: 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு
ஒமிக்ரான் வைரஸ்: 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகளை அதிகரித்துவரும் நிலையில் 12 நாடுகளை அதி ஆபத்து கொண்டவையாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வரையறுத்துள்ளது.

பின் வரும் நாடுகளில் ஒமிக்ரான் கோவிட் பரவல் இருக்கலாம் என்பதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. High risk நாடுகள் என்றும் இவற்றை வரையறுத்துள்ளது.

1.பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்
2. தென் ஆப்பிரிக்கா
3. பிரேசில்
4. வங்கதேசம்
5. போட்ஸ்வானா
6. சீனா
7. மொரிசியஸ்
8. நியூசிலாந்து
9. சிம்பாப்வே
10. சிங்கபூர்
11. ஹாங்காங்
12.இஸ்ரேல்

தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, கோவை, மதுரை திருச்சி, என நான்கு நிலையங்களிலும் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தொடர்பு எண்கள் மருத்துவத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.

1.Rt pcr நெகடிவ் சான்றிதழுடன் தான் விமானத்தில் வந்திருக்க வேண்டும்.

2. எனினும் வந்திரங்கிய உடன் மீண்டும் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்படும்.

3.தொற்று இல்லை எனில் 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல். 8 ஆம் நாள் மீண்டும் பரிசோதனை. அதிலும் நெகடிவ் வந்தால் தனிமைப்படுத்தல் இல்லை.

4. பாசிட்டிவ் வந்தால் உடனடியாக அவரது மாதிரி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தனி வார்டில் தனிமைப்படுத்தல். மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படும்.

5. ஒமைக்ரான் இல்லை என மரபணு சோதனையில் கண்டறியப்பட்டால் டிஸ்சார்ஜ். இல்லையெனில் தொடர் சிகிச்சை. தொற்று நெகடிவ் வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ்.

இந்த நாடுகள் அல்லாமல் பிற நாடுகளிலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவர்களில் யாராவது 5% பேருக்கு விமான நிலையத்தில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments