வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள்- புதிதாக பெயர் சேர்க்க 19 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பம்



தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் என 6 சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முகாமில் மொத்தம் 6 ஆயிரத்து 749 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் புதிதாக பெயர் சேர்க்க 4 ஆயிரத்து 181 பேரும், பெயர் நீக்க 1,550 பேரும், திருத்தம் மேற்கொள்ள 632 பேரும், ஒரே தொகுதிக்குள் திருத்தம் மேற்கொள்ள 386 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர்.

 
மாவட்டத்தில் 6 முகாம்களில் மொத்தம் 27 ஆயிரத்து 936 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக சேர்க்க 19 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் பெயர்களை நீக்க 4 ஆயிரத்து 424 பேரும், திருத்தம் மேற்கொள்ள 2,107 பேரும், தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய 1,524 பேரும் விண்ணப்பித்தனர்.

இனி விண்ணப்ப படிவங்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதன்பின் வருகிற ஜனவரி மாதம் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments