விராலிமலையில் மொபட்டில் புகுந்த பாம்பால் பரபரப்பு
விராலிமலை கடைவீதியில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் மதன். இவரது மொபட்டை நேற்று தனது கடைக்கு முன்பு நிறுத்திவிட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது மொபட்டின் மேலே சுமார் 3 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அதை விரட்ட முயன்றபோது பாம்பு அவரது மொபட்டிற்குள் புகுந்தது. இதைதொடர்ந்து அங்கு வந்த மெக்கானிக் ஒருவர் வண்டியின் சீட்டை கழட்டிய போது சீட்டுக்கு அடியில் மறைந்து இருந்த பாம்பை அங்கிருந்தவர்கள் கையில் இருந்த கட்டையால் அடித்துக் கொன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments