புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகளுடன் தனி வார்டு




புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 வார்டுகளுடன் தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ்

கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாடு மீண்டு வருகிற நிலையில் தற்போது புதிய வகை வைரசான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

50 படுக்கைகள் தயார்

தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தும் பணி மற்றும் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தனி வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டானது கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments