புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு சார்பில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு




தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு சார்பில் விழிப்புணர்வு போஸ்டர்கள் தயாரிக்கும் போட்டி எய்ட்ஸ் விழிப்புணர்வு, ரத்ததானம் மற்றும் காசநோய் தடுப்பு ஆகிய 3 தலைப்புகளில் நடைபெற்றது. இதில், ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவ- மாணவிகள் க.திவ்யதர்ஷினி, பெ.ஹேமலதா மற்றும் சி.நித்திஷ்குமார் முறையே ஒவ்வொரு பிரிவிலும் முதலிடமும், ரத்ததான போஸ்டர் தயாரிக்கும் போட்டியில் க.தமிழ்செல்வி இரண்டாமிடமும், சே.திரிஷா, மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர், சுகாதார பணிகளின் துணை இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். முதலிடம் பெற்ற 3 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3000, இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.2000 மும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.ஆயிரமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச் செல்வன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments