அறந்தாங்கியில் வானில் பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு
பருவநிலையில் மாற்றம் காரணமாக அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் அறந்தாங்கி பகுதியில் நேற்று காலை வெடி வெடித்தது போல வானத்தில் பலத்த சத்தம் கேட்டது. அப்போது வானத்தில் புகை மண்டலமும் காணப்பட்டது. இந்த அதிசய நிகழ்வு நடந்து சில மணி நேரத்தில் அறந்தாங்கி அருகே அரசர்குளம் வடபகுதியில் உள்ள ஒரு குளத்தில் மரக்கா சைசில் ஒரு பாக்ஸ் விழுந்ததாக அப்பகுதியை சேர்ந்த நபர்கள் பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள குளத்தை வருவாய் துறையினர், போலீசார் சென்று பார்வையிட்னர். அப்போது ஏதும் தெரியவில்லை எந்த அசம்பாவிதம் இல்லை என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அப்பகுதில் மழை தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் குளத்தில் உள்ள தண்ணீரை எடுத்து விட்டு குளத்தில் விழுந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments