சுகாதாரப் பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்துக்கு பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் (ஆண்), சுகாதார ஆய்வாளா்கள் 58 பணியிடங்களுக்கும் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் 106 பணியிடங்களுக்கும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்துக்கு பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் (ஆண்), சுகாதார ஆய்வாளா்கள் 41 பணியிடங்களுக்கும் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் 74 பணியிடங்களுக்கும் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் இவா்கள் தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தப்படுவா்.

விண்ணப்பபடிவங்களை தேசிய நல்வாழ்வு குழும வலைத்தளம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 6ஆம் வீதியில் அமைந்துள்ள துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) அலுவலகத்தில் (பழைய அரசு மருத்துவமனை வளாகம்) வரும்டிச. 15 மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments