வெள்ளிக்கிழமை விடுமுறை
அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல்-குவைன் ஆகிய 7 அமீரகங்களை உள்ளிட்டக்கிய முடியாச்சி நாடாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்கி வருகிறது. இதன் தலைநகரமாக அபுதாபி இருந்து வருகிறது.
பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்து வருகிறது. அதன்படியே ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது.
ஞாயிறு முதல் வியாழன் வரை...
அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊழியர்களுக்கு ஞாயிறு முதல் வியாழன் வரை வேலை நாட்களாகவும், வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை நாளாகவும் இருக்கிறது.
அங்கு பல ஆண்டுகளாக இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பல தனியார் நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் இதையே பின்பற்றுகின்றன.
4½ நாட்கள் மட்டுமே வேலை
இந்த நிலையில் தற்போது இதில் மிகப்பெரிய மாற்றத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நாட்கள் 6-ல் இருந்து 4½ நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மேற்கத்திய நாடுகளை போலவே ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாட்கள் ஆகும். அதிலும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் புனித நாளாக கருதப்படுவதால் அன்று ½ நாள் மட்டுமே வேலை நாள் ஆகும்.
2½ நாட்கள் விடுமுறை
இந்த புதிய நடைமுறை குறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1-ந்தேதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது. அதன்படி, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும், வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி, ஞாயிறு உள்பட 2½ நாட்கள் விடுமுறையாகும்.
முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம்
வேலை-வாழ்க்கை சமநிலையை அதிகரிப்பதற்கும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருகிறது. உலகளவில் வேலை நாட்கள் 5 ஆக இருந்து வரும் சூழலில் அதற்கும் குறைவாக 4½ நாட்களை வேலை நாட்களாக அறிமுகப்படுத்தும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம்தான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.