மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தணிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும். பஸ்சில் போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுத்து படிக்கட்டில் நிற்காதாவாறு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் படிகட்டிகளில் நின்று பயணம் செய்யாதவாறு ஓட்டுனரும்,நடத்துனரும் பணியாற்ற வேண்டும். மாணவர்கள், மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பஸ்களை இயக்க ஏதுவாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் என போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க போக்குவரத்துதுறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.