புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி சார்பில் செல்போன் ரீசார்ஜ் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!செல்போன் ரீசார்ஜ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்போன் நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கான கட்டணத்தை இப்போது பல மடங்குக்கு உயர்த்தியுள்ளது.

இதனால் சாமானிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும், சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments