விவசாயிகளை தரக்குறைவாக பேசிய கூட்டுறவு வங்கி செயலாளர் பணியிடை நீக்கம்
கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட இணைப்பதிவாளர் உத்தரவு.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வருபவர் ராஜகோபால் இவர் வங்கிக்கு பயிர்க் கடன்கள் வாங்க வரும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாகவும் அவர்களுக்கு பயிர் கடன் கொடுக்காமல் அலைக்கழித்த வருவதாகவும் ராஜகோபால் குறித்து  விவசாயிகள் மாவட்ட இணை பதிவாளரிடம் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் மாவட்ட இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி நடத்திய விசாரணையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபால் பயிர் கடன் வாங்க வந்த விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தெரியவந்தது.இதையடுத்து கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்குவதற்கு வந்த விவசாயிகளை தரக்குறைவாக பேசி அலைக்கழித்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட இணை பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments