மாநில அறிவியல் மாநாட்டிற்கு 16 பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு






புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிலிருந்து மாநில மாநாட்டிற்கு 16 பள்ளிகள் தேர்வு,
தேர்வுபெற்றவர்களுக்கு குழந்தை விஞ்ஞானி விருது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 29-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் எம்.ராஜா ராம், சிவகாமி இரத்ததான கழகம் சா.மூர்த்தி, சென்னை மாபாய் கே.உஷாகுமாரி, கிங்க்ஸ் கேட்டரிங் கல்லூரி தாளாளர் செ.சுந்தரவேல், மாதங்கி டிரேடர்ஸ் ப.சம்பத்ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம் மாநாட்டில் 156 ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டு, கலந்துகொண்ட 126 ஆய்வுகளிலிருந்து 16 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஆவணத்தான்கோட்டைநடுநிலைப் பள்ளி ஸ்ரீநிதியின் காலை உணவின் அவசியம் மற்றும் காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்,
மீனம்பட்டி நடுநிலைப்பள்ளி
கண்ணன், முரளிதரனின்
நீர்நிலைகளில் மூழ்கி இறப்பவர்களை தடுக்கும் ஒரு ஆய்வு,
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி லோகேஸ்வரன், சுப்ரியா ஆகியோர் மழை நீர் சேகரிப்பு குறித்து ஒர் ஆய்வு, அண்ணாமலையான் குடியிருப்பு நடுநிலைப் பள்ளி சிவசக்தியின் கயிறு தொழிற்சாலையின் தொழில்நுட்பங்கள், ஒடப்பவிடுதி நடுநிலைப் பள்ளி கவிப்பிரியா, பரமேஸ்வரியின் மீன் வளர்ப்பு முறையும் அதனைச் சார்ந்துள்ள சிக்கல்களும், அசோக்நகர் நடுநிலைப் பள்ளி புதுக்கோட்டை பகுதியில் பெருகிவரும் துரித உணவுக் கடைகள்,
பூங்குடி நடுநிலைப் பள்ளி நேத்ராவின் கொரோனா இல்லாத தமிழகம், மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளி பபிதாவின்
சுற்றுச்சூழலில் பூச்சியின் பங்கு,
நற்பவள செங்கமாரி அரசு உயர்நிலைப் பள்ளி கவிராசு வின் எங்கள் ஊரில் உள்ள நீர்நிலைகளில் வளரும் தாவரங்கள்,
புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளி கமலீஸ்வரனின் புல்வயல் பகுதியில் கோவிட் 19,வடசேரிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி திவ்யா, அபர்ணாவின்
தானியங்களை பாரம்பரிய முறையில் சேமித்தல்,திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருணனின் தோட்டத்தில் தேங்காய் நார் பயன்பாடு, வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி காட்டுப்பட்டி பகுதியில் நிலவி வரும் நோய்கள்,புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி குகணேசன், குமாரின்
விளை பயிர்களின் மதிப்பை கூட்டுதல், திருக்கோகர்ணம் ஏபிஜே துளிர் இல்லம் சபரிவாசனின் நெகிழி இல்லா தமிழகம், திருமயம் கல்பனா சாவ்லா துளிர் இல்லம் பிபிதா வின் குழந்தைகளின் பூச்சிப்பல் குறித்த ஆய்வும் ஆகும்.




இதிலிருந்து மாநில மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி சான்றிதழ்கள், கேடயம், நினைவுப் பரிசு உள்ளிட்டவற்றை வழங்கி வாழ்த்திப் பேசினார்.தேர்வான 16 பள்ளிகளின் ஆய்வு அணியினரும், வழிகாட்டி ஆசிரியரோடு டிசம்பர் மாதம் 28, 29 தேதிகளில் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்குபெறுவார்கள்.

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.இராமதிலகம் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நோக்கம் குறித்தும்,
குழந்தை விஞ்ஞானிகளின் அறிவியல் மனப்பான்மை குறித்து அறிவியல் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் க.சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் அ.மணவாளன், மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் கலந்துகொண்ட ஆய்வுகள் குறித்து நேரு இளையோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர், முனைவர் இரா.இராஜ்குமார் ஆகியோர் பேசினர். இம்மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் டி.விமலா, கே.ஜெயராம், முனைவர்
ரெ.பிச்சைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மா.குமரேசன், மா.சிவானந்தம், அ.ரஹமதுல்லா, க.செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் சி.ஷோபா அனைவருக்கும் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments