போலி மருந்தாளுனர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகே தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுனர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். செயலாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். போலி மருந்தாளுனர்களை ஒழித்திட வேண்டும், வலி மருந்துகள் போதை தரும் மருந்துகளாக இளைஞர்களிடம் கிடைப்பதை தடுத்திட வேண்டும், மருந்தாளுனர்கள் முழு நேர பணியாளர்களாக பணிபுரிவதை உறுதி செய்திட வேண்டும், ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த மருந்தாளுனர்கள், ஆதரவு தொழிற்சங்கத்தினர், அமைப்பினர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments