கிளை - சார்பில் செயலிழந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும்,செயல்படுத்த தவறிய ஆவுடையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை (கி.ஊ) கண்டித்தும் மாபெரும் சாலை மறியல் போராட்டம்
நாள்: 16.12.2021 வியாழக்கிழமை நேரம்: காலை 11.00 மணியளவில்
இடம்: கிழக்கு கடற்கரை சாலை,SBI வங்கி அருகில், கோபாலப்பட்டிணம்.
1.ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக சாலைகள் காட்சியளிப்பதால் மழை நேரங்களில் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆகையால் மழைநீரை வெளியேற்றி தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் புதிய தார்ச்சாலைகள் அமைத்து தர வேண்டும்.
2.ஆர்.புதுப்பட்டிணத்தில் பிரதான சாலையில் மழைநீர் வெளியேறுவதற்காக வெட்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமலும், தூம்புகள் சரிவர அமைக்கப்படாமல் பள்ளங்களாக இருப்பதால் அந்த வழியாக செல்லக்கூடிய குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே பள்ளங்களை மூடி, சாலைகளை சரி செய்து தர வேண்டும்.
3.கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் இடிக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக புதிதாக கட்டித்தர வேண்டும்.
4.ஆர்.புதுப்பட்டிணம் பள்ளிவாசலில் உள்ள குளத்தில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள படிகட்டுகள் மற்றும் சுற்றுசுவர்கள் சிதிலமடைந்து குளத்தில் குளிப்பதற்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாக சரி செய்து தர வேண்டும்.
5.கோபாலப்பட்டிணம், ஆர்.புதுப்பட்டிணம் பகுதிகளில் பல மாதங்களாக எரியாத தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்திட வேண்டும். 6.கோபாலப்பட்டிணத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கால் அப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே குப்பை கிடங்கை அகற்றி மக்கள் வசிக்காத பகுதிகளில் மாற்றி அமைக்க வேண்டும்.
7.ஆர்.புதுப்பட்டிணம், கோபாலப்பட்டிணம் பகுதிகளில் பல மாதங்களாக அள்ளப்படாமல் ஆங்கங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
8.அவுலியா நகர் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அவுலியா நகர் பகுதிகளில் தரமற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை மற்றும் தார்சாலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து புதிதாக அமைத்து தர வேண்டும்.
9.கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக குடிநீர் வசதி இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
10.நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் பிளீச்சிங் பவுடர் கொண்டு மாதந்தோறும் சுத்தம் செய்திட வேண்டும்.
11.கோபாலப்பட்டிணம் மற்றும் ஆர்.புதுப்பட்டிணம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் நிலை உள்ளது. ஆகவே அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
12.கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை தூய்மை பணியாளர் கொண்டு சுத்தம் செய்திட வேண்டும்.பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும்.
அனைவரையும் போரட்டக்களத்திற்கு அழைப்பது...
மனிதநேய மக்கள் கட்சி தமுமுக கோபாலப்பட்டிணம். ஆர்.புதுப்பட்டிணம் கிளை மற்றும் ஊர் பொதுமக்கள்
74020 63328/95245 76948/
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.